கம்போடியா வியாழக்கிழமை கொரோனா தொற்றினால் பதிவான முதலாவது மரணத்தை உறுதிபடுத்தியுள்ளது.
அதன்படி கடலோர நகரான சிஹானுக்வில்லேயில் அமைந்துள்ள சீன நுறுவமொன்றில் சாரதியாக பணிபுரிந்த 50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் அவர் கெமர்-சோவியத் நட்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மொத்தம் 1,124 கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் மாத்திரம் கம்போடியாவில் பதிவாகியுள்ளன.
கம்போடியா ஆசியாவில் மிகக் குறைவான கொரோனா நோயாளர்களை கொண்ட ஒரு நாடாகும். இருப்பினும் பெப்ரவரி 20 முதல் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM