10 வருடத்திற்கு முன் நிலநடுக்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் பேருக்கு ஜப்பான் அஞ்சலி

Published By: Vishnu

11 Mar, 2021 | 12:51 PM
image

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாட்டைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 20,000 பேருக்கு ஜப்பான் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தியது.

இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைகள் கடலோர நகரங்களை அழித்துடன், உலகின் மிக மோசமான அணுசக்தி பேரழிவைத் தூண்டியது.

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 2.46 மணிக்கு (05:46 GMT) ஜப்பான் முழுவதும் உள்ள மக்கள் ஒரு நிமிடம் மெளனம் காத்தனர்.

மக்கள், சிலர் பூங்கொத்துகளை ஏற்றிக்கொண்டு, சுனாமியால் உயிரிழந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக பிரார்த்தனை செய்வதற்காக கடற்கரை மற்றும் கல்லறைகளில் கூடியிருந்தனர்.

அதே நேரத்தில் ஜப்பானிய தலைநகர் டோக்கியோவில் நடந்த நினைவு விழாவில் பேரரசர் நருஹிட்டோ மற்றும் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் இறந்தவர்களுக்கான நினைவிடத்தில் இணைந்தனர்.

நகரின் தேசிய அரங்கில் பேசிய பேரரசர் நருஹிட்டோ, “சோகத்தின் மறக்க முடியாத நினைவு” ஒரு தசாப்த காலமாக நீடித்தது என்றார்.

பாதிக்கப்பட்டவர்களில் பலர், அவர்கள் கற்பனை செய்யமுடியாத அளவிற்கு பெரும் சேதத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம் ஏராளமான கஷ்டங்களை வென்றுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

2011 மார்ச் 11 அன்று ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நடுக்கம் ஒரு பெரிய சுனாமியைத் தூண்டியது, இது புகுஷிமா டாயிச்சி அணுமின் நிலையத்தை தாக்கி, 160,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கதிர்வீச்சு அச்சம் காரணமாக அங்கிருந்து வெளியேறவும் வழிவகுத்தது.

இதனால் 15,900 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,525 பேர் காணாமல் போயினர். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 3,775 பேர் உடல்நலப் பிரச்சினைகள் அல்லது பேரழிவு தொடர்பான பிற சிக்கல்களால் பின்னர் இறந்துவிட்டதாக அரசாங்கம் கூறியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47