வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ,  திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை வழிபாடுகளில் ஈடுபட்டார்.

326 மில்லியன் ரூபா செலவில் இவ்வாலய புனரமைப்புபணிகளை இந்தியா மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தோடு, பல தசாப்தகாலமாக இலங்கை - இந்தியா  இணைப்புப்பாலமாகவிருந்த ராமர்சேது பகுதியில் இந்திய உயர் ஸ்தானிகர் விசேட வழிபாடுகளில் ஈடுப்பட்டார்.

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தொடர்புகளை உருவாக்குவதில் வரலாற்று கட்டமைப்புக்களின் வகிபாகத்தை நினைவுகூர்ந்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே,  இந்திய இலங்கை மக்களின் பிணைப்புக்கள் வலுவடையும் என குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திக்கு  இலங்கை - இந்தியாவுக்கிடையிலான சமகால உறவு குறித்து தெளிவுபடுத்தியது இந்தியா