மெக்ஸிகோ காங்கிரஸின் கீழ் சபை புதன்கிழமை பொழுதுபோக்கு, மருத்துவ மற்றும் விஞ்ஞான பயன்பாடுகளுக்காக கஞ்சாவை பயன்படுத்தும் ஒரு சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோரின் நிர்வாகத்தின் ஆதரவுடன், இந்த சட்டமூலம் ஒரு நாட்டில் ஒரு பெரிய மாற்றத்தை குறிக்கிறது.

சட்டமியற்றுபவர்கள் ஆதரவாக 316 வாக்குகளையும், எதிராக 129 வாக்குகளையும் பெற்று சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்தனர். 

தற்சமயம் செனட் சட்டமூலத்தை மறுஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இந்த சட்டமூலம் கஞ்சா செடியை விற்பனை, ஆராய்ச்சி மற்றும் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்வதற்கான ஐந்து வகையான உரிமங்களை அனுமதிக்கும். 

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஒரு அனுமதியுடன், கஞ்சாவை வளர்க்கவோ, எடுத்துச் செல்லவோ அல்லது நுகரவோ முடியும்.

2013 இன் பிற்பகுதியில், உருகுவே நவீன காலங்களில் கஞ்சா உற்பத்தி மற்றும் விற்பனையை சட்டப்பூர்வமாக்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது. 

பிராந்தியத்தில் உள்ள ஆர்ஜன்டினா, சிலி, கொலம்பியா மற்றும் பெரு போன்ற பிற நாடுகளும் அதன் மருத்துவ பயன்பாட்டுக்கு அனுமதிக்கின்றது.

2018 ஆம் ஆண்டில், கனடாவும் பொழுதுபோக்கு பயன்பாடு உள்ளிட்டவைக்காக கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கியது, பல பெரிய அமெரிக்க மாநிலங்களும் அதன் சட்ட பயன்பாட்டை ஒழுங்குபடுத்துகின்றன.