இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள்

Published By: Digital Desk 4

11 Mar, 2021 | 07:07 AM
image

(நா.தனுஜா)

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் புதிய நியமனங்கள் வெளியாகின | Virakesari.lk

இதுகுறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினால்  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத்தாக்குதல்கள் குறித்த தற்போதைய நிலைவரம் தொடர்பில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை விரிவாக ஆராய்ந்தோம்.

இந்தப் பயங்கரவாதத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியடையவுள்ள நிலையில், அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளோம்.

அதன்படி ஆணைக்குழுவினால் கண்டறியப்பட்ட விடயங்களையும், பிரத்யேகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைகளையும் பெரிதும் வரவேற்கின்றோம். 

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

பயங்கரவாதத்தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் மற்றும் உரிய நேரத்தில் தமது கடமைகளைச் செய்வதற்குத் தவறியவர்கள் என்று பெயரிடப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரமும் சுதந்திரமும் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் நாம் வலியுறுத்துகின்றோம். அதனைச் செய்வதற்கான நீதிப்பொறிமுறை உடனடியாக நிர்ணயிக்கப்பட வேண்டும்.

இதுவிடயத்தில் மிகமுக்கியமான 22 ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிகின்றோம்.

அவை வெகுவிரைவில் அவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான விரைவானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான நீதிப்பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04