இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

Published By: Digital Desk 4

10 Mar, 2021 | 09:30 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 86 000 ஐ தாண்டியுள்ளது.

இன்று புதன்கிழமை இரவு 9.30 மணி வரை 300 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 86 643 ஆக அதிகரித்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 83 210 பேர் குணமடைந்துள்ளதோடு , 2782 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை நேற்று செவ்வாய்கிழமை மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளது.

உடுவில் பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண்ணொருவர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் கடந்த 9 ஆம் திகதி இரத்தம் நஞ்சானமை, கொவிட் தொற்று மற்றும் தீவிர நீரிழிவு நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளனர்.

ஹொரபே பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆணொருவர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் கடந்த 7 ஆம் திகதி உயர் இரத்த அழுத்தம், கொவிட் தொற்று மற்றும் தீவிர நீரிழிவு, தீவிர பக்கவாதம் என்பவற்றால் உயிரிழந்துள்ளனர்.

அக்குறனை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஆணொருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் கடந்த 9 ஆம் திகதி கொவிட் நிமோனியா மற்றும் சிறுநீரகம் செயழிலந்தமை என்பவற்றால் உயிரிழந்துள்ளனர்.

றாகம பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய ஆணொருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி கொவிட் நிமோனியா , புற்று நோய், தீவிர நீரிழிவு நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56