சீன ஹெக்கர்களால் குறிவைக்கப்பட்ட 30 ஆயிரத்திற்கும் அமெரிக்க நிறுவனங்கள்

By Gayathri

10 Mar, 2021 | 09:22 PM
image

வொஷிங்டன், யு.என்.ஐ

அண்மைய நாட்களில் உள்ளூர் அமைப்புக்கள் உட்பட 30,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் சீன ஹெக்கர்களால் குறிவைக்கப்பட்டுள்ளன.  

இது “வழக்கத்திற்கு மாறாக ஆக்கிரமிப்பாக காணப்படுவதோடு பாரிய அளவிலான ‘சீன இணைய உளவு பிரசாரம்’  என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளதாக  அமெரிக்க கணினி பாதுகாப்பு நிபுணர் பிரையன் கிரெப்ஸ் தெரிவித்தார்.

அதேநேரம் மைக்ரோசொப்ட் நிறுவனமானது பாதிப்புகளுக்கான இணைப்புகளை வெளியிட்ட பின்னர், பாதுகாப்புத் திருத்தங்களுடன் இதுவரை புதுப்பிக்கப்படாத சேவையகங்களில் தாக்குதல்களை தடுப்பதற்கு “வியத்தகு முறையிலான செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன” என்று கிரெப்ஸ் கூறினார்.

அண்மைய நாட்களில் மைக்ரோசொப்ட் பரிமாற்று மென்பொருளில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை ஹெக்கர்கள் அறிந்துக்கொண்டு மின்னஞ்சல்களை திருடி, கணினி சேவையகங்களைத் தாக்கும் கருவிகளைக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க கணினி பாதுகாப்பு நிபுணர் பிரையன் கிரெப்ஸ்  இணைய பாதுகாப்பு செய்தி இணையதளத்தின் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

இவ்விதமான தாக்குதல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜெனிபர் சாகி, “இதுவொரு தீவிர அச்சுறுத்தல்" என்றார். 

அத்துடன் ‘இந்த சேவையகங்களை இயக்கும் ஒவ்வொருவரும் அவ்விதமான  தாக்குதல்களை கண்டுபிடிப்பதற்காக தற்போது செயற்பட வேண்டும். இவ்விதமாக ஹெக்கர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கின்றார்கள்”என்றார்.

இந்நிலையில், ஹெக்கிங் குழுவானது தமது நடவடிக்கைகளுக்கு “ஹஃப்னியம்” என்று பெயரிட்டுள்ளது. இது “மிகவும் திறமையான மற்றும் அதிநவீன நடிகர்" என்பது பொருளாகும் என்று கூறப்படுகின்றது. 

தொற்று நோய் ஆராய்ச்சியாளர்கள், சட்ட நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள், சிந்தனை மையங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட அமெரிக்காவை தளமாகக்கொண்ட நிறுவனங்கள் ஆகியவற்றை “ஹஃப்னியம்” கடந்த காலத்தில் குறிவைத்துள்ளது.

இவ்வாறு குறிவைக்கப்பட்டதில் அமெரிக்கா முழுவதும் குறைந்தது 30,000 நிறுவனங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. சிறு வணிகங்கள், நகரங்கள், உள்ளூர் மற்றும் நகர நிர்வாகங்கள் உள்ளிட்டவை கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக சீன இணைய உளவுப் பிரிவால் ஹெக் செய்யப்பட்டுள்ளன என்று அமெரிக்க கணினி பாதுகாப்பு நிபுணர் பிரையன் கிரெப்ஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சொல் பாதுகாப்பதற்கு பயன்படுத்தப்பட்ட மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான கணினி அமைப்புகளின் ‘கட்டுப்பாட்டைக் ஹெக்கர்கள் கைப்பற்றியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட வலையமைப்புக்களுக்குள் மீண்டும் நுழையவும் அவற்றை நகர்த்தவும் ஹெக்கர்கள் ‘பின் கதவுகளை’ பயன்படுத்தியுள்ளனர். இது மொத்த செயற்பாட்டில் ஒரு சிறிய சதவீதமாகும். 

அத்துடன் அந்த சதவீதமானது மொத்த பாதிப்பில் 10இல் ஒன்றுக்கும் குறைவாக இருக்கலாம் என்று அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

 

அத்துடன் தாக்குதல்களை நடத்திவிட்டு இலகுவாகவும் பாதுகாப்பாகவும் திரும்புவதற்கான பல்வேறு வழிகளையும் ஹெக்கர்கள் ஏற்படுத்துகின்றார்கள் என்று குறிப்பிடும் அமெரிக்க கணினி பாதுகாப்பு நிபுணர் பிரையன் கிரெப்ஸ், தாக்குதலின் ஆரம்ப நிலைமைகளைப் தாய்வானின் பிரபல சைபர் குற்றங்கள் தொடர்பான ஆராய்ச்சியாளர் செங்-டா சாய் முதன் முதலாக கண்டுபிடித்துள்ளார். 

இந்த விடயம் சம்பந்தமாக அவர் ஜனவரி மாதத்திலேயே மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் கவனத்திற்குக்கொண்டு வந்ததோடு குறைபாடுகள் தொடர்பிலும் முகாமைத்துவத்திடம் புகாரளித்ததுள்ளார். 

அவ்வாறு தன்னால் கூறப்பட்ட தகவல்கள் வெளியில் கந்துவிட்டதா என்ற ஐயம் இருப்பதாக அவர் தனது பிரத்தியேக இடுக்கையொன்றில் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது. 

நன்றி:- இந்தியா புளும்ஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right