கொரோனாவால் 19 வயது யுவதி உயிரிழப்பு

Published By: Digital Desk 4

09 Mar, 2021 | 10:04 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் -19 தொற்றின் காரணமாக 19 வயதுடைய யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

ஹெம்மாத்தகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த யுவதி கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 6 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 

கொவிட் நிமோனியா மற்றும் மூளையில் ஏற்பட்ட கட்டி என்பன இவரது உயிரிழப்பிற்கான காரணமாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதே வேளை திங்களன்று மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின. 

அநுராதபுரத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண்னொருவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெப்ரவரி 20 ஆம் திகதி கொவிட் நிமோனியா , உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

தர்கா நகர் பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடைய பெண்னொருவர் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி கொவிட் நிமோனியா , உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் உறுப்புக்கள் செயழிலந்தமை என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 6 ஐ சேர்ந்த 78 வயதுடைய ஆணொனொருவர் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் கடந்த 7 ஆம் திகதி கொவிட் நிமோனியா , இரத்தம் நஞ்சானமை மற்றும் நீரிழிவு நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

ஜாஎல பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய பெண்னொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த 8 ஆம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இன்று செவ்வாய்கிழமை இரவு 10.00 மணி வரை 288 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 86 327 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 82 753 பேர் குணமடைந்துள்ளதோடு , 2934 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை இன்றைய தினமும் கொவிட் தொற்றால் உயிரிழந்த 7 பேரின் சடலங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59