வடகிழக்கில் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் அடுத்த வாரம் கலந்துரையாடல் - விக்கி

Published By: Digital Desk 4

09 Mar, 2021 | 09:58 PM
image

வடகிழக்கு தமிழர் தாயத்தில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் அடுத்த வாரம் முக்கிய கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். 

.

இம்மாநாட்டில் முன்னாள் ஜ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உள்ளிட்ட பலரும் பங்கெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று  நடைபெற்ற அமெரிக்க ஒக்லண்ட் பல்கலைக்கழக முகாமைத்துவ பணிப்பாளர் அனுராதா மிட்டலுடனான காணொளி கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட அவர், இச்சந்திப்பிற்கென அனைத்து மட்டத்திலும் மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே அமெரிக்க ஒக்லண்ட் பல்கலைக்கழக முகாமைத்துவ பணிப்பாளர் அனுராதா மிட்டல் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும் வடக்கில் இன்னமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தமது ஆய்வறிக்கை அமெரிக்க அரசிற்கும் ஜ.நா ஆணையாளருக்கும் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவித்ததுடன் இணை அனுசரணை நாடுகளிற்கும் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

ஆயினும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான தமது போராட்டத்தை தமிழ் மக்கள் தொடரவேண்டுமென கேட்டுக்கொண்ட அவர் ஊடகவியலாளர்கள் தமது பணியை தளரவிடாது முன்னெடுக்கவும் கோரியிருந்தார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணியின் வெற்றியானது சர்வதேசத்திற்கு தமிழ் மக்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருப்பதாக தெரிவித்த அனுராதா மிட்டல் அதனை முன்னின்று செயற்படுத்தியவர்கள் பாராட்டுக்குரியவர்கள் எனவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் வேலன் சுவாமிகள் மற்றும் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03
news-image

ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்...

2025-01-14 19:03:31
news-image

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல்

2025-01-14 19:06:02
news-image

கிளிநொச்சியில் காயமடைந்த யானை உயிரிழப்பு

2025-01-14 19:15:00