கொரோனா பரவல் நிலைமையால் பஸ் சேவைக்கான மானியங்களை நீடிக்க தீர்மானம்

Published By: Digital Desk 4

09 Mar, 2021 | 07:13 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகளை வழமை கொண்டு வருவதற்கு கால தாமதம் ஏற்படும் என்பதால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மானியங்களை இம் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொவிட் 19 தொற்று நிலைமையில் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து பஸ் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு பஸ் உரிமையாளர்களிடமிருந்து அறிவிடப்படும் புதுப்பித்தல் கட்டணம், தாமதக் கட்டணம், விலைமனுக் கோரல் கட்டணம், நேரசூசி கட்டணம், உள்நுழைவு அனுமதிப்பத்திர கட்டணம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை தற்காலிக அனுமதிப்பத்திர கட்டணம் போன்றவற்றை 2020 ஆம் ஆண்டின் இறுதி வரை விடுவிப்பதற்காக 2020 நவம்பர் 09 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பஸ் சேவைகளை மீள்நிலைக்கு கொண்டு வருவதற்கு மேலும் சில காலம் எடுக்கும் என்பதால், வருடாந்த விலைமனுக் கோரல் கட்டணத்தின் 10 வீதம் அல்லது 15,000 ரூபாய் போன்ற பெறுமதிகளில் அதிக பெறுமதி கொண்ட தொகையை அறவிடல் , அதிவேக நெடுஞ்சாலை தற்காலிக அனுமதிப்பத்திரக் கட்டணத்தின் 10 வீதத்தை அறவிடல் மற்றும் நேரசூசி மற்றும் உள்நுழைவு அனுமதிப்பத்திர கட்டணத்தை விடுவித்தல் மானியங்களையும் இம் மாதம் 31 ஆம் வரை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விமானப்படை 75ஆம் ஆண்டு விழா: வான்...

2026-03-07 05:27:05
news-image

ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் -...

2026-03-07 04:39:24
news-image

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன்...

2026-03-07 04:25:51
news-image

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது...

2026-03-06 14:18:57
news-image

பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக்...

2026-03-06 15:08:38
news-image

நாட்டைப் பற்றவைக்கப் பார்க்கும் 'ஹனுமான்கள்': போலிப்...

2026-03-06 14:30:58
news-image

அவசரகால நிலை தமிழர் குரல்வளையை நெரிக்கும்...

2026-03-06 14:31:42
news-image

ஈரான் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டக்...

2026-03-06 15:47:59
news-image

அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப்...

2026-03-06 15:55:46
news-image

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான்...

2026-03-06 15:47:28
news-image

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து...

2026-03-06 17:06:57
news-image

அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை...

2026-03-06 17:17:23