மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில்,  தரம் 1-4, 6-10 மற்றும் தரம் 12 ஆம் வகுப்பு ஆகிய மாணவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறித்த தகவலை கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உறுதிபடுத்தியுள்ளார்.

அத்துடன், மேல்மாகாணத்தில் தரம் ஐந்து,  கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் நேற்று கல்வியமைச்சர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடதக்கது.