போலிவூட் நடிகர் ரன்பீர் கபூர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இந்த தகவலை ரன்பீர் கபூரின் தாயார் நீது கபூர், தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிபடுத்தியுள்ளார்.

இது தொடர்பில் நீது கபூர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ரன்பீர் கபூர் கொரோனா தொற்றுக்கு நேர்மறையாக பரிசோதித்துள்ளார். எனினும் அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். 

தற்சமயம் அவர் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ரன்பீர் கபூர் பின்பற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.