மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவர்கள் மீது 2 பேர் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்தில் 3 மாணவர்கள் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர்.அக்குரஸ்ஸ பஸ் நிலையத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கத்தி குத்துக்கு இலக்கான 3 மாணவர்களும்  அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.