(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் ஞாயிறு மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
புத்தளம் அலாவத்த பகுதியில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த ஒரு குழுவினர் வரும் வழியில் ரம்பொடை ஓயாவில் நீராடச் சென்றுள்ளனர்.
குறித்த குழுவினரில் அநேகமானவர்கள் நீராடிய பின்பு வெளியேறியுள்ள நிலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் நீண்ட நேரமாக நீராடிக் கொண்டிருந்துள்ளனர்.
இதன் போது திடீரென நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில் இவர்கள் இருவருக்கும் நீரிற்குள் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவர்களுடன் வருகைதந்த அனைவரும் இவர்களை காப்பாற்ற பெரும் முயற்சி செய்துள்ள போதும் நீரின் வேகம் அதிகமாக காணப்பட்டதன் காரணமாக இவர்களை காப்பாற்ற முடியவில்லை.
இந்நிலையிலேயே இவர்கள் இன்று காலை கொத்மலை பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கபட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லபட்டுள்ளது.
ஆர்.எஜ்.ஷகீலா நிமாலி வயது 33, டி.நிர்மலா மானெல் வயது 33 என்ற இரு பெண்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரனைகளை கொத்மலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM