இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான ஐ.சி.சி.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி ஜூன் 18 ஆம் திகதி சவுத்தாம்டனில் ஆரம்பமாகும் என்பது உறுதிபடுத்தப்பட்டது.

இந்த தகவலை பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி திங்களன்று உறுதிப்படுத்தினார்.

லண்டனின், லோர்ட்ஸில் இப் போட்டிகள் நடைபெறும் என முன்னர் கூறப்பட்டது, பின்னர் அதன் இடம் மாற்றம் குறித்து யூகங்கள் எழுந்துள்ள நிலையில், ஐ.சி.சி இன்னும் சவுத்தாம்ப்டனுக்கான நகர்வை உறுதிப்படுத்தவில்லை, 

ஆனால் புதிய இடம் குறித்து (சவுத்தாம்டன்) பி.சி.சி.ஐ தலைவர் உறுதியாக உள்ளார்.

ஐ.சி.சி.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி ஜூன் 18 - 22 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.