பிராந்தியத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கம் சுனாமி அச்சங்களையும் வெகுஜன வெளியேற்றங்களையும் தூண்டிய சில நாட்களின் பின்னர் நியூசிலாந்து அதன் கிழக்கு கடற்கரையில் 6.6 ரிச்செடர் அளவிலான நிலநடுக்கத்தால் அதிர்ந்தது.

அதன்படி செவ்வாய்க்கிழமை காலை தொடர்ச்சியான அதிர்வலைகள் பதிவாகியுள்ளன.

இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் நாட்டின் கடற்கரையின் 100 மைல் நீளமுள்ள வெளியேற்றங்களைத் தூண்டிய நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த நிலநடுக்கம் நியூஸிலாந்தின் வடகிழக்கு கடற்கரையில் 6.6 ரிச்டெர் அளவு உள்ளூர் நேரப்படி காலை 8.35 மணிக்கு பதிவாகியுள்ளது.

எனினும் இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.