சேவையிலிருந்து ஒய்வு பெற்றுள்ள இராணுவ வீரர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தரும் வேலைத்திட்டமொன்று விரைவில்  முன்னெடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பரிந்துரையின் கீழ், சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு பல்வேறு நிறுவனங்களிலிருந்து வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதிர்வரும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.