வவுனியா சமளங்குளம் இத்திகுளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் இரவு வீட்டில் இருந்து சென்ற குறித்த நபர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை இதனையடுத்து உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.

இந்நிலையில் இத்திகுளம் குளக்கட்டு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.   

சம்பவத்தில் குறித்த பகுதியை சேர்ந்த அஜந்தகுமார் வயது 40 என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.