இலங்கை அணியின் தனஞ்சய டி சில்வா தனது முதலாவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்துள்ளார்.

இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான  3 ஆவது டெஸ்ட் போட்டி எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

ஆரம்பத்தில் 26 ஒட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை  சந்திமால் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோரின் நிதான துடுப்பாட்த்தின் மூலம் 190 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.

தனஞ்சய டி சில்வா 104 ஓட்டங்களை பெற்று தனது முதலாவது டெஸ்ட் சதத்தை கடந்து துடுப்பெடத்தாடிவரும் நிலையில், சந்திமல் 56 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றார்.