சிவலிங்கம் சிவகுமாரன்

இந்த உலகம் உருவான பிறகு தோன்றிய மனிதன், எப்போது நாகரிகமடைந்தான் என்று காலத்தை வரையறுத்து கூறுவது கடினம்.பல்வேறு சித்தாந்தங்களுக்குள் தம்மை வரித்து கட்டிக் கொண்டிருக்கும் மதங்கள் கூறும் வரலாற்று சம்பவங்களும் குறிப்புகளும் சரியான ஆதாரங்களை கொண்டிருப்பவனாக இல்லை. 

எனினும் மனிதன் நாகரிக கலாசாரத்துக்குள் புகுந்து மதங்களின் அடிப்படையில் கட்டுக்கோப்பை உருவாக்குவதற்கு முன்னரும் இந்த உலகில் மரணங்கள் சம்பவித்திருக்கின்றன என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.

அப்போது எந்த அடிப்படையில் இறந்தவர்களின் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டன என்பது ஆராய்ச்சிக்குரியது. எனினும் காலமாற்றத்தில் அனைத்து மதங்களுமே தமது மக்கள் இறுதிச் சடங்கில் பின்பற்றப்பட வேண்டிய முறைகளை குறிப்பிட்டுள்ளன.

இதில் தமிழர்களைப் பொறுத்தவரை சாதி அடிப்படையில் இந்த இறுதிச் சடங்குகள் மாற்றங்களுக்குள்ளாகி வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

தென்னிந்திய கிராமங்களில் இறந்தவரை பாடையில் வைத்து கொண்டுசெல்லும் முறை இன்னும் உள்ளது. இறந்தவரின் உறவினர்கள் வெளிநாடுகளிலிருந்து வரும் வரை உடலத்தைப் பாதுகாக்கும் இரசாயன மருந்துகள், தைலங்களை இட்டு 5 நாட்கள் வரை வைத்திருக்கும் கலாசாரமும் தமிழர்களிடையே உள்ளதை மறுக்க முடியாது.

எனினும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இறந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் முறையானது ஆயிரம் வருடங்களை தாண்டியும் மாற்றங்களுக்குட்படவில்லை. முஸ்லிம்களின் வாழ்க்கை முறைகளைப்பற்றி  தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்ட வழிமுறைகளின் அடிப்படையில் இறந்தவரை அடக்கம் செய்யும் முறையும் ஒன்று. 

முஸ்லிம் இனத்தவர்கள் சாதிபார்ப்பதில்லை. அவர்கள் மனிதர்களை மனிதர்களாகவே பார்க்கின்றனர். அதன் காரணமாகவே தமது இனத்தில் ஒருவர் இறந்தால் மிகவும் எளிமையாக அதேநேரம் மிக விரைவாக    உடலை அடக்கம் செய்யும் முற்போக்கான முறைகளைக் கொண்டிருக்கின்றனர். 

மிக விரைவாக என்பதை ஒரு நாள் என்று கணிக்கின்றனர்.  உலகில் பல பாகங்களிலும் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் இந்த முறையை பின்பற்றுவதற்கு எந்த தடைகளும் கிடையாது. அது அவர்களின் நம்பிக்கை, சுதந்திரம்.  ஏன் வேறு எந்த மதப்பிரிவை கொண்டிருப்பவர்களும் கூட இறந்தவர்களின் உடலை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்ற இறுதிச்சடங்கு வழிமுறைகளுக்கு உலகில் எங்கேயும் தடைகள் கிடையாது.

ஏனென்றால் வாழும் போது ஒருவர் நல்லவரோ , கெட்டவரோ , பணக்காரரோ , ஏழையோ  இறந்த பின்னர் அந்த உடலுக்கு செய்ய வேண்டிய மரியாதையை முறைப்படி அவரவர் மரபுக்கேற்ப செய்வது நாகரிமடைந்த மனிதர்களின் பண்பாகக் கொள்ளப்படுகின்றது. கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவி உச்சம் தொட்ட போது கூட  முஸ்லிகள் வாழ்ந்து வரக்கூடிய நாடுகளில் தொற்றால் இறந்தவர்கள்  சுகாதார வழிமுறைகளுக்கமைய அடக்கமே செய்யப்பட்டனர். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-07#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/