சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திங்களன்று டெல்லியின் புறநகரில் விவசாயிகள் நடத்திய போராட்டங்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் இணைந்தனர்.

விவசாய உற்பத்தி சந்தைகளை தனியார் வாங்குபவர்களுக்கு திறக்கும் புதிய சட்டங்களை இரத்து செய்யும்படியும் இதன்போது கோரிக்கை முன்வைத்தனர்.

ஹரியானா மாநிலத்துடன் டெல்லியின் எல்லைக்கு அருகிலுள்ள இடத்தில் 20,000 க்கும் மேற்பட்ட பெண்கள் கூடியிருந்ததாக காவல்துறை மற்றும் நிகழ்வு அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இந்திய அரசாங்கத்தின் விவசாரய சீர்திருத்தங்களுக்கு எதிராக டிசம்பர் மாதத்திலிருந்து, பல விவசாயிகள் தங்கள் குடும்பத்தினருடன் இந்திய தலைநகரின் புறநகரில் உள்ள மூன்று தளங்களில் முகாமிட்டுள்ளனர். 

போராட்டங்களை எதிர்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் 18 மாதங்களுக்கு சட்டங்களை நிறுத்தி வைக்க முன்வந்தது, ஆனால் விவசாயிகள் பின்வாங்க மறுத்துவிட்டதுடன், சீர்திருத்தங்களை இரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரினர்.

இந்தியாவின் 9 2.9 டிரில்லியன் பொருளாதாரத்தில் விவசாயம் கிட்டத்தட்ட 15 சதவீதம் ஆகும்.