ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களே தற்போது கூச்சலிட்டுகின்றனர்: சமல் ராஜபக்ஷ

Published By: Digital Desk 8

08 Mar, 2021 | 01:23 PM
image

(எம்.மனோசித்ரா)
2015 ஆம் ஆண்டு முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறும் வரை இடம்பெற்ற பல சம்பவங்கள் தொடர்பில் அழுத்தங்களின் காரணமாக பொலிஸாரினால் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. மாவனெல்ல சம்பவம் இடம்பெற்ற போதே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றிருக்காது. எவ்வாறாயினும் பொறுப்பு கூற வேண்டியவர்களே தற்போது கூச்சலிடுவதாக நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ , உள்நாட்டலுவல்கள் இராஜாங்க  அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்  அறிக்கை மீது 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சியால் இது தொடர்பில் 3 நாட்கள் விவாதம் கோரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதற்கு தயாராகவுள்ளது. எவ்வாறிருப்பினும் பொறுப்பு கூற வேண்டியவர்களே தற்போது கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு கூச்சலிட்டுக் கொண்டிருப்பவர்கள் தாம் அறிந்தவற்றை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கூறியிருக்கலாம். அவ்வாறின்றி தேவையற்ற கருத்துக்களை கூறிக் கொண்டிருப்பது பிரயோசனமற்றது. எவ்வாறிருப்பினும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கையை தொடர்ந்து முறையாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

2015 ஆம் ஆண்டு முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறும் வரை இடம்பெற்ற பல சம்பவங்கள் தொடர்பில் அழுத்தங்களின் காரணமாக பொலிஸாரினால் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. மாவனெல்ல சம்பவம் இடம்பெற்ற போதே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றிருக்காது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:26
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18