படையினரைப் பாதுகாத்தல்  - தீவிரமாகும் தேசிய கொள்கை

Published By: Digital Desk 2

08 Mar, 2021 | 02:48 PM
image

சத்ரியன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைப் படையினர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிர கட்டத்தை அடைந்துள்ள நிலையில், இலங்கைப் படையினரைப் பாதுகாப்பதற்கான சட்டத்தை உருவாக்கப் போவதாக அரசாங்கம் சைகை காண்பித்திருக்கிறது.

அமெரிக்காவையும், பிரித்தானியாவையும் பின்பற்றி, இலங்கைப் படையினரைப் போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு தயங்கப் போவதில்லை என்று, அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்தெரிவித்துள்ளார்.

இதில் இரண்டு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.இலங்கைப் படைகளுக்கு எதிராக உள்நாட்டில் போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களின் வாய்களை அடைப்பது ஒரு நோக்கம் அவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் சர்வதேச விசாரணைகளில் சாட்சியமளிப்பதை தடுப்பதும் இன்னொரு நோக்கம்.

இதன்மூலம், குற்றச்சாட்டுக்குள்ளாகிய அரச படையினருக்குப் பாதுகாப்பு அளிப்பது தான் அரசின் திட்டம். அமெரிக்காவையும் பிரித்தானியாவையும் பின்பற்றியே இந்தச் சட்டங்களைக் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருவதாக அரசாங்கம் கூறியிருக்கிறது.

“அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியுள்ள சட்டங்களின் படி, அமெரிக்கபடையினருக்கு எதிராக ஏதாவது சர்வதேச அமைப்பு அல்லது நாடு விசாரணைகளை நடத்துமாயின்,  அதற்கு அமெரிக்க அரசாங்கம், நீதிமன்றங்கள் மற்றும் அமெரிக்க பிரஜைகள் ஒத்துழைப்பு வழங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் படைக்கு எதிரான விசாரணைக்கு எவரும் ஒத்துழைப்பு வழங்கமுடியாது. அவ்வாறு வழங்கினால் அது பாரதூரமான குற்றம். பிரித்தானியாவிற்குள் அந்நாட்டு படையினருக்கு எதிராக ஏதாவது விசாரணைகளை மேற்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்படுமாயின், அது முற்றுமுழுதாக சட்டவிரோத செயல்” என்றும், உதாரணங்களை அடுக்கியிருக்கிறார் அமைச்சர் பீரிஸ்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-07#page-9

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு குறுக்கே நிற்கும்...

2024-12-10 09:04:49
news-image

தமிழரசு கட்சி மட்டக்களப்பில் பெற்ற பெருவெற்றியும்...

2024-12-09 10:45:04
news-image

அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது...

2024-12-09 09:48:21
news-image

ஐந்தாண்டுகளுக்கு ஆளுகை தொடரும் - பிரதியமைச்சர்...

2024-12-08 15:45:45
news-image

ரஷ்ய-உக்ரேன் போர் முனைக்கு வலிந்து தள்ளப்பட்டுள்ள...

2024-12-08 15:48:28
news-image

அநுர அரசின் அணுகுமுறை தமிழ் கட்சிகளை...

2024-12-08 12:41:32
news-image

கல்முனை விவகாரம் பிச்சைக்காரன் புண்ணாக தொடரக்...

2024-12-07 11:51:32
news-image

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறுபான்மையினருக்கு...

2024-12-08 15:49:06
news-image

மிரட்டப்படும் எதிர்க்கட்சிகள்

2024-12-07 11:12:36
news-image

வரலாற்றுத் திருப்பமாகுமா?

2024-12-07 10:36:56
news-image

ஓரிரவு கொள்கை வீதத்தால் இலங்கையின் பொருளாதாரத்தில்...

2024-12-08 11:00:25
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஆயுள் அதிகம்

2024-12-08 12:55:25