மேல் மாகாணத்தை தவிர நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள பாடசாலைகள் அடுத்தவாரம் அளவில் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதன்படி முன்னதாக அறிவித்தபடி அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் மார்ச் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பெப்ரவரி 25 ஆம் திகதி, அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கும் 2021 கல்வியாண்டுக்கான முதல் தவணை விடுமுறை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.