தேசிய பொருளாதாரம் படுபாதாளத்தில் விழும் : பலவீனத்தை மறைக்க அரசு தொடர்ந்தும் முயற்சி - எச்சரிக்கிறார் ரணில்

08 Mar, 2021 | 07:14 AM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய பொருளாதாரம் இவ்வருட இறுதியில் பாரிய நெருக்கடி நிலையை எதிர் கொள்ளும். பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கத்திடம் சிறந்த கொள்கை திட்டம் ஏதும் கிடையாது. 

அரசாங்கம் தனது பலவீனத்தை மறைத்துக் கொள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. 

அரசாங்கத்திற்கு சான்று வழங்கிய ஊடகங்கள் இன்று அரசாங்கத்தின் குறைபாடுகளை பகிரங்கப்படுத்தாமல் மௌனம் காப்பது கவலைக்குரியது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டின் விளைவை நாட்டு மக்கள் இவ்வருட இறுதியில் அறிந்துகொள்வார்கள். அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பல இறக்குமதிகள் ஊடாக வரிச்சலுகை வழங்கியது. இதனால் சாதாரண மக்கள் பயன்பெறவில்லை. அரசாங்கத்தை ஆட்சிக்கு  கொண்டு வர முன்னின்று செயற்பட்ட செல்வந்தர்கள் மாத்திரம் பயனடைந்தார்கள்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில்  2010  தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அச்சிடாத அளவிற்கு நாணயங்களை அச்சிட்டுள்ளது. 

இவ்வாறான தன்மை நாட்டின் நிதி நெருக்கடி நிலையை வெளிப்படுத்தியுள்ளது.தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் முறையற்ற பொருளாதார முகாமைத்துவ கொள்கையினை செயற்படுத்துகிறது.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் வகுக்கப்பட்ட புதிய பொருளாதார முகாமைத்துவ கொள்கைகள் அனைத்தையும் அரசாங்கம்  நிராகரித்துள்ளது. 

சிறந்த விடயங்களை செயற்படுத்தும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது. சர்வதேசத்தில் அரச முறை கடன்களை பெற முடியாத அளவிற்கு அரசாங்கம் சர்வதேச மட்டத்திலும் முரண்பாடுகள தோற்றுவித்துள்ளது. இவ்வாறான தன்மை பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

இளம் தலைமுறையினர் அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்து ஆதரவு வழங்கினார்கள். இன்று இளைஞர், யுவதிகளின் எதிர்பார்ப்பு தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வேலையில்லா பற்றாக்குறை தோற்றம் பெற்றுள்ளது.வெளிநாட்டு முதலீடுகள் நாட்டில் தொழிற்துறையை மேம்படுத்த வேண்டும். ஆனால் தற்போது வெளிநாட்டு முதலீடுகளினால் கூட  இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறவில்லை.

அரசாங்கத்தின் பலவீனத்தன்மையை அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து சுட்டிக்காட்ட வேண்டும். அரசாங்கத்திற்கு நற்சான்றிதழ் வழங்கிய ஊடகங்கள் அரசாங்கத்தின் குறைப்பாட்டை சுட்டிக்காட்டாமல் மௌனம் காப்பது கவலைக்குரியது. அரசாங்கம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு கூட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09