மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நொச்சிமுனை பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் தனக்குத்தானே மண்ணெண்ணெய் உற்றி தீயிட்டு தற்கொலை செய்ய முயன்ற நிலையில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இசை நடனக்கல்லூரி வீதி முதலாம் குறுக்கு வீதியிலுள்ள 27 வயதுடைய இனம் குடும்ப பெண்ணுக்கும் கணவருக்குமிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறையடுத்து சம்பவதினமான இன்று பிற்பகல் 4.15 மணியளவில் குறித்த பெண் தனக்குத் தானே மண்ணெண்ணெய் உற்றி தீ வைத்துக்கொண்டதையடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார் 

இதனையடுத்து உடனடியாக அவரை மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்