(எம்.மனோசித்ரா)
பதுளை மாவட்டத்தில் பெருந்தோட்ட கிராமம் ஒன்றில் தற்காலிக மலசலகூடத்தை அமைத்ததற்காக தோட்ட முகாமையாளரால் தொழிலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

4 பிள்ளைகளின் தந்தையான குறித்த தொழிலாளி நீண்ட நாட்களாக தமக்கான பிரத்தியேக மலசலகூடமொன்றை அமைத்து தருமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரியுள்ளார். எனினும் நீண்ட நாட்களாகியும் அமைத்துக் கொடுக்கப்படாதமையால் அவர் தற்காலிகமாக மலசலகூடமொன்றை அமைத்துள்ளார்.

தமக்கு அறிவிக்காமல் இவ்வாறு மலசலகூடம் அமைத்தமை தவறெனக் கூறி இதனை உடனடியாக அகற்றுமாறு தோட்ட முகாமையாளர் உத்தரவிட்டுள்ளார். இதன் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

அத்தியாவசிய தேவையான மலசலகூடத்தை அமைத்தமைக்காக இவ்வாறு தொழிலாளியொருவர் தாக்கப்படுவது கவலைக்குரியதாகும் என்றும் , இவ்வாறான பிரச்சினைகளுக்கு தொழிற்சங்கங்கள் ஊடாக தீர்வை பெற எதிர்பார்த்துள்ளதாகவும் தொழிலாளர்கள் சார்பில் பிரதிநிதியொருவர் கூறினார்.