2021 ஆம் ஆண்டுக்கான விவோ இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடிவுசெய்துள்ளதாக ஐ.பி.எல். நிர்வாக சபை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. 

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.பி.எல் களியாட்டம் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

இந்த சீசன் 2021 ஏப்ரல் 9 ஆம் திகதி சென்னையில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு இடையே முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகும்.

உலகின் மிப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பிளேஆஃப்களையும் 2021 மே 30 ஆம் திகதி இறுதிப் போட்டியையும் நடத்தவுள்ளது.

ஒவ்வொரு அணியும் லீக் கட்டத்தில் நான்கு இடங்களில் விளையாட உள்ளது. 56 லீக் போட்டிகளில், சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு தலா 10 போட்டிகளையும், அகமதாபாத் மற்றும் டெல்லி தலா 8 போட்டிகளையும் நடத்துகின்றன.

விவோ ஐ.பி.எல்.லின் இந்த பதிப்பின் சிறப்பம்சங்களில் ஒன்று, அனைத்து போட்டிகளும் நடுநிலை இடங்களில் விளையாடப்படும், எந்த அணியும் தங்கள் சொந்த இடத்தில் விளையாடாது. அனைத்து அணிகளும் லீக் கட்டத்தில் 6 இடங்களில் 4 இடங்களில் விளையாடும்.

பிற்பகல் விளையாட்டுக்கள் 3:30 மணிக்கும், மாலைநேரப் போட்டிகள் இரவு 7:30 மணிக்கும் தொடங்கப்படும்.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் கொண்டு போட்டியை பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்திய பின்னர், வீரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்போடு ஐ.பி.எல். தனது சொந்த மைதானங்களிலேயே நடத்துவதில் பி.சி.சி.ஐ நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்த ஆண்டு விவோ ஐ.பி.எல். மூடிய கதவுகளுக்குப் பின்னால் விளையாடப்படும், மேலும் போட்டியின் பிற்பகுதியில் பார்வையாளர்களை அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

2021 விவோ ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை‍ையை பார்வையிட கிளிக் செய்க