ஒரு காலத்தில் இஸ்லாமிய அரசுக்கு கோட்டையாக இருந்த வடக்கு ஈராக் நகரத்தில் பிரார்த்தனை செய்ய போப் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை மொசூலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

குறித்த பகுதியில் தற்சமயம் கிறிஸ்தவ குடும்பங்கள் ஓரளவு அதிகளவில் உள்ளனர்.

84 வயதான போப்பாண்டவர் தனது வரலாற்று ஈராக் சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாளான இன்று எர்பிலிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மொசூலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரான்சிஸின் பயணம் ஈராக்கிற்கான முதல் போப்பாண்டவர் பயணமாகும், அங்கு அவர் சகவாழ்வைப் பிரசங்கித்து, மதத்தின் பெயரில் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தினார்.

போப்பின் இந்த பயணத்தின்போது, ஈராக்கிய பாதிரியார்கள் மற்றும் மதகுருமார்கள் அவரை வரவேற்றனர்.