மேற்கிந்தியத்தீவுகளுடனான கிரிக்கெட் தொடரில் பங்கெடுப்பதற்காக இலங்கை அணியின் மேலும் ஐந்து வீரர்கள் நேற்றிரிவு கரீபியன் நோக்கி புறப்பட்டுள்ளனர்.

லஹிரு திரிமான்ன, தனஞ்சய டிசில்வா, ரோஷென் சில்வா, விஸ்வ பெர்னாண்டோ மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோரே இவ்வாறு கரீபியன் நோக்கி புறப்பட்ட இலங்கை வீரர்கள் ஆவர்.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.