ஹரிகரன்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும்இடையில் கிழக்கு முனையத்தில் தொடங்கிய சர்ச்சை, மேற்கு முனையத்தில் புதிய திருப்பத்தை எட்டியிருக்கிறது.

மைத்திரி , ரணில் கூட்டுஅரசாங்கத்தின் காலத்தில் இந்தியா - ஜப்பான் ஆகிய நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்டகிழக்கு முனைய உடன்பாட்டை, மிக இலகுவாக கிழித்தெறிந்து விட்ட இலங்கை அரசாங்கம்,அதேவேகத்தில் மேற்கு முனைய திட்டத்தை இந்தியாவின் தலையில் கட்டிவிட எடுத்த முயற்சிகளே இப்போதைய சிக்கலுக்கு காரணம்.

கிழக்கு முனைய விவகாரமே இன்னமும் தீர்க்கப்பட்டு விட்டதாக இந்தியா கருதவில்லை.கிழக்கு முனைய முத்தரப்புஉடன்பாட்டை இலங்கை மதிக்க வேண்டும் என்று இந்தியா பகிரங்கமாகவேவலியுறுத்தியிருந்தது.

ஆனால், இலங்கை அரசாங்கமோ, அதனைக்கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.ஒன்றுக்கு இரண்டு முறை அமைச்சரவைக்கூட்டத்தில் அந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.அவ்வாறான திட்டத்தையே இலங்கைஅரசாங்கம் இந்தியாவுடன் கலந்தாலோசிக்காமல் இரத்துச் செய்தது.

கடந்தவாரம் அமைச்சரவை முடிவுகளைஅறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம்இந்தியாவின் அழுத்தங்களினால் தீவக மின் திட்டங்களை சீனாவுக்கு வழங்கும் உடன்பாடு இரத்துச் செய்யப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பட்டது.அதற்கு அவர், எந்தவொரு இராஜதந்திர அல்லது அரசியல் அழுத்தங்களினாலும் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மாற்றப்பட்டதில்லை என்றும், அவ்வாறு நடக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தீவர மின் திட்டங்கள் குறித்து இவ்வாறு கூறிய அரசாங்கம் தான், இரண்டு முறை அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்ட தீர்மானத்தை அடியோடு மாற்றியிருந்தது.கிழக்கு முனைய விவகாரம் முடிந்து போய் விட்ட ஒன்று என, இலங்கை அரசாங்கம் கூறினாலும் கூட, இந்தியா அந்த உடன்பாடு காலாவதியாகி விட்டதாக அறிவிக்கவில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-07#page-7

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/