தேசிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பணவு எதிர்வரும் ஜனவரி முதல் மூன்று கட்டங்களாக அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும் என பிரமர் ரணில் விக்கிரமசிங்க தனது விசேட உரையில் தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தில் சேர்த்து கொள்ளப்படும்.
மேலும் அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் ஒருபோதும் இரத்து செய்யப்பட மாட்டாது
இதேவேளை தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு எதிர்வரும் மே மாதத்திற்கிடையில் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
தனியார் துறை ஊழியர்களுக்கு ரூபா 2500 சம்பள உயர்வு வழங்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் மற்றும் 5 தின சேவை தொடர்பிலும் தொழிற்சங்கங்களுடன் பேசப்பட்டது.
8 மணித்தியால வேலை நேரத்தை மாற்றும் எண்ணம் கிடையாது. மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
அரச மற்றும் தனியார் துறையினருக்கு வாழ்க்கை செலவுக்கு ஏற்ற சம்பளத்தை வழங்க அடுத்த வருடம் முதல் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாகன புகைப்பரிசோதனை கட்டணம் ரூபா 1500 ஆக இடைக்கால கட்டணமாக அறவிடப்படும். லீசிங் வாகனத்திற்கான மதிப்பீட்டுக் கட்டணம் ரூபா 5000 ஆகவும் முச்சக்கரவண்டடிகள், மோட்டார் சைக்கிள்களுக்கான மதிப்பீட்டுக் கட்ணம் ரூபா 3000 ஆக குறைக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM