கபில்

குறைந்தளவு மக்கள் வசிக்கும் இரணை தீவுக்குப் பதிலாக, ஆட்கள் வசிக்காத பாலைதீவு, சிறுத்தீவு உள்ளிட்ட பல தீவுகளை அரசாங்கம் தெரிவு செய்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அதில் நியாயம் இருந்திருக்கும். மாறாக இரணைதீவை ஜனாஸாக்கள் புதைக்கும் இடமாகத் தெரிவு செய்து, தமிழ் , முஸ்லிம் மக்களுக்கிடையில் மீண்டும் முரண்பாட்டைத் தோற்றுவிக்க முனைந்திருக்கிறது அரசாங்கம்

இரணைதீவில் வசித்து வந்த ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் 1992ஆம் ஆண்டு  இராணுவ நடவடிக்கையின்போது வெளியேற்றப்பட்டனர். பின்னர் மீண்டும் அவர்கள் குடியேறுவதற்கு கோரிக்கை விடுத்தபோதும் கடற்படை அங்குள்ள தமது தளத்தை வலிமையாக்குவதற்காக அனுமதி அளித்திருக்கவில்லை

ஜெனிவாவில் இஸ்லாமிய நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ள இலங்கை அரசாங்கம், புதிதாக வேறு முட்டுக்கட்டைகளையும் உருவாக்கி விட்டிருக்கிறது.

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருந்தபோதும், அவர்களின் மத வழக்கங்களுக்கு முரணாகவே, சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கட்டளையிட்டிருந்தது.

ஆரம்பத்தில் கொரோனா பற்றிய பீதி மற்றும் அதன் தொற்றும் தன்மை பற்றிய தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லாமை போன்ற காரணங்களால், தகனம் செய்யும் உத்தரவுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை.

ஆயினும், பின்னர் தமது மத உரிமையை அவர்கள் வலியுறுத்திய போது, அந்த வழக்கத்தைப் பின்பற்ற அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் கூறி விட்டது.

பௌத்த பிக்குகள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர்.

இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கம் பல்வேறு நிபுணர் குழுக்களை அமைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த நிலையில் தான், ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பித்தது.

இந்தக் கூட்டத்தொடரில் இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகள் எவரும் இலங்கை அரசுக்கு சார்பாக பேசவில்லை. 

அத்துடன், ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் வலியுறுத்தியது.

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு இஸ்லாமிய நாடுகளின் ஆதரவு அவசியம்.

ஏற்கனவே இஸ்லாமிய நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதற்காக, பாகிஸ்தான், பேச்சுக்களை நடத்தியிருந்தது.

இந்தநிலையில் தான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகைக்குப் பின்னர், சடலங்களை அடக்கம் செய்யும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதற்கு இஸ்லாமிய நாடுகள், அமைப்புகள் வரவேற்பும் தெரிவித்தன. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-07#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/