நாட்டின் அரசியல் நிச்சயமற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டு வந்தார் இம்ரான் கான்

By Vishnu

07 Mar, 2021 | 10:56 AM
image

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, நாட்டின் அரசியல் நிச்சயமற்ற தன்மையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். 

பாராளுமன்றத்தின் 342 உறுப்பினர்களைக் கொண்ட கீழ் சபையில் இம்ரான் கான் 178 வாக்குகளைப் பெற்றார்.

பாக்கிஸ்தான் ஜனநாயக இயக்கம் (PDM) - 11 கட்சிகளின் கூட்டணி - வாக்களிப்பதை புறக்கணித்ததால், இம்ரான் கானுக்கு தேவையான எண்களைப் பெறுவதை எளிதாக்கியது.

பி.டி.எம் என்பது இம்ரான் கான் அரசாங்கத்தை கவிழ்க்க கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைக்கப்பட்ட 11 கட்சி கூட்டணியாகும். இது 2018 தேர்தல்களை மோசடி செய்த பின்னர் தோற்றம் பெற்றதாக கூறப்படுகிறத.

எதிர்க்கட்சியினர் இராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து தனது அரசாங்கத்தின் நியாயத்தன்மையை மீட்டெடுக்கும் முயற்சியில் இம்ரான் கான் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.

புதன்கிழமை நெருக்கமாக நடைபெற்ற செனட் தேர்தலில் தனது நிதி அமைச்சர் அப்துல் ஹபீஸ் ஷேக் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து, தேசிய சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நாடுவதாக இம்ரான் கான் வியாழக்கிழமை அறிவித்திருந்தார். 

தோல்விக்குப் பின்னர் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரியிருந்தது.

வெற்றியினையடுத்து பெரும் எதிர்க்கட்சி கூட்டணியை கண்டித்து தொலைக்காட்சி உரையொன்றில் இம்ரான் கான், ஊழல்வாதிகளை ஒருபோதும் விடமாட்டேன் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right