கல்விப் பொதுத் தராதரண சாதாரதரப் பரீட்சையின்போது பரீட்சார்த்தியாக ஆள்மாறாட்டம் செய்து, பரீட்சை எழுதுவதற்காக அமர்ந்த குற்றச்சாட்டுக்காக ஒருவர் வலஸ்முல்லை பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

28 வயதான அவர் குறித்த பகுதியில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான சந்தேக நபரை வலஸ்முல்லை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.