கொழும்பு நகரத்திலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் நேற்று நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது ஒன்பது வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்று நைஜீரியர்கள், நான்கு மாலைதீவினர் மற்றும் இரண்டு இந்தியர்கள் ஆகியோரே கல்கிஸை, மொரட்டுவை, தெஹிவளை, கிரேண்ட்பாஸ், கொம்பனித் தெரு ஆகிய பகுதிகளில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருக்கும் நைஜீரியர்கள் மற்றும் சமூக ஊடகங்கள், இணையம் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை தீங்கிழைக்கும் வகையில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் காவல்துறையினரால் இதுபோன்ற விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.