திபெத்தின் மிக உயர்ந்த ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா சனிக்கிழமை முதல் கொவிட் -19 தடுப்பூசி டோஸ்ஸை பெற்றதுடன், ஏனையவர்களையும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளவும் ஊக்கப்படுத்தினார்.

"சில கடுமையான சிக்கல்களைத் தடுப்பதற்காக, இந்த ஊசி மிகவும் உதவியாக இருக்கும்" என்று 85 வயதான அவர் வட இந்திய நகரமான தர்மசாலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சனிக்கிழமை தடுப்பூசி போடப்பட்ட பின்னர் கூறினார்.

அத்துடன் இந்த ஊசி எடுக்க அதிகமான மக்களுக்கு தைரியம் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தலாய் லாமாவின் இல்லத்தில் வசிக்கும் மேலும் பத்து பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட மருந்து தயாரிப்பாளரான அஸ்ட்ராஜெனெகா ஆகியோரால் உருவாக்கப்பட்ட தடுப்பூசியை இந்த பதினொருவரும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.