இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று சனிக்கிழமை கொழும்பிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் அஸ்ட்ரசெனிகா கொவிட் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டார்.

நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதை தொடர்ந்து, இன்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது. 

குறித்த சந்தர்ப்பத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அருகில் இருந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.