நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியூசிலாந்தில் 8 மணித்தியாலத்திற்குள் 3 மிகப்பெரும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்த நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.