திட்ட சேவைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனம் ஆகியன அரசாங்க நிறுவனங்கள் மற்றும் இதர அபிவிருத்திப் பங்காளர் அமைப்புகளுடன் இணைந்து சூழல் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் தொடர் கலை நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன. 

2016 உலக சுற்றாடல் தினத்தை குறிக்கும் வகையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி (EU-SDDP)நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், இந்த செயற்பாடுகளுக்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. 

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் 60 மில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

EU-SDDP நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், UNOPS நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட திண்மக்கழிவு முகாமைத்துவத்தில் ‘3R’ கொள்கை ஊக்குவிக்கப்படுகிறது. 

இதில், உற்பத்தியாகும் கழிவுகளின் அளவைக் குறைத்தல், கழிவாக அகற்றப்பட்ட பொருட்களை மீளப் பயன்படுத்தல், கழிவுகளை மீள் சுழற்சிக்குட்படுத்தி, அவற்றை மாற்று வழியில் பயன்படுத்த உதவுதல் இந்த அனைத்து செயற்பாடுகளுக்கும் கூடிய அளவிலான சமூக பங்குபற்றல் அவசியமானதாக அமைந்துள்ளது. 

இந்த இச்செயன்முறையில் மக்கள் தமது நிலைமையை புரிந்து கொள்ளும் நிலையில் மாத்திரமே இது சாத்தியமானதாக அமைந்துள்ளது. 

இதன் காரணமாக சூழலைப் பாதுகாப்பது தொடர்பில்ரூபவ் குறிப்பாக ஒருங்கிணைந்த திண்மக் கழிவு முகாமைத்துவத்தினூடாக கருத்தரங்குகள், UNOPS நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டத்தில் அத்தியாவசிமானதொன்றாக அமைகின்றது.

உலக சுற்றாடல் தினத்தை குறிக்கும் வகையில் பொது மக்கள் மத்தியில் சூழல் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் பற்றி விழிப்புணர்வை உருவாக்கும் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

இலங்கையின் சூழலை பாதுகாக்கும் வகையில் நிலைபேறான செயற்பாடுகளான சேதன விவசாய முறைகள் மற்றும் முறையான கழிவு முகாமைத்துவம் போன்றவை சமூகங்கள் மத்தியில் ஊக்குவிக்கப்பட்டிருந்தன.

உலக வங்கியின் அங்கத்துவ அமைப்பான, IFC, உடன் UNOPS நிறுவனம் இணைந்து மட்டக்களப்பில் விவசாயக் கண்காட்சியும் வியாபாரச் சந்தையும் (‘Agri Fair and Exhibition’) கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதன் மூலமாக, சேதன விவசாய முறைகள் ஊக்குவிக்கப்பட்டிருந்ததுடன் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் மற்றும் வீட்டுப்பொருட்களை பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கப்பட்டிருந்தனர். 

மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் உள்ளுர் உற்பத்தியாளர்கள் என 5000க்கு மேற்பட்டவர்கள், மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். 

இயற்கை மண் நிலைமைகள் மற்றும் உரங்கள், சேதன உணவு உற்பத்தி, சூழலுக்கு பாதுகாப்பான தொழில்நுட்பங்களான உயிர் வாயு உற்பத்தி மற்றும் கழிவு உருவாக்கத்தை குறைத்தல் தொடர்பான விவரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. 

UNOPS மற்றும் IFC ஆகியவற்றுக்கு மேலதிகமாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் (FAO) சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனம் (IWMI), உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனமான ஜனதக்ஷன், சர்வதேச அரசசார்பற்ற வேர்ள்ட் விஷன் மற்றும் ஒக்ஸ்ஃபாம், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சகல உள்ளுராட்சி சபைகள் மற்றும் வெவ்வேறு அரசாங்கத் திணைக்களங்கள் ஆகியன இந்தக்கண்காட்சியில் பங்கேற்று தமது அனுபவங்களை பகிர்ந்திருந்தன.

மத்திய சூழல் அதிகார சபை மற்றும் வலய கல்வித்திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டிருந்த உலக சுற்றாடல் தின நிகழ்வுகளில், “திண்மக்கழிவுகளை மீள பயன்படுத்துவது” எனும் தலைப்பில் சித்திரக் கண்காட்சியில், வவுனியா மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளும் பங்கேற்றிருந்தன. 

இந்த 60 பாடசாலைகளிலிருந்து 150க்கும் மேற்பட்ட மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஓவியங்கள் மற்றும் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பயன்தரும் பொருட்கள் போன்றன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

இந்நிகழ்வில், பாடசாலை மாணவர்களின் கலாசார நாட்டியங்கள் மற்றும் அபிநய நிகழ்வுகள் ஆகியன “சூழல் மற்றும் வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மன்னாரில், நகர சபை மற்றும் வலய கல்வித் திணைக்களம் ஆகியவற்றுடன் UNOPS நிறுவனம் இணைந்து, மன்னாரைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மத்தியில், கழிவுப் பொருட்களிலிருந்து கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பான கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாடசாலை மாணவர்கள் இக்கண்காட்சியில் பெருமளவு ஈடுபாட்டைக் காண்பித்திருந்தார்கள். பொது மக்களுக்கான கண்காட்சி நிகழ்வு நகர மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் 200க்கும் அதிகமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 23 சதவீதமானவர்கள் சிறுவர்கள் மற்றும் இளம் பராயத்தினராவர். எதிர்காலத்தில் இவர்களே தீர்மானம் எடுப்போரும் ஆவர். சூழல் தொடர்பில் இவர்களின் சிந்தனை என்பது நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைத்த வண்ணமுள்ளது. 

சூழல் மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு இன்றைய இளைஞர்களின் கல்வி மற்றும் ஈடுபாடு என்பவை நிலைபேறான அபிவிருத்திக்கு மிகவும் அத்தியாவசியமானதாக அமைந்துள்ளன. 

குடும்பத்திலும் சமூகத்திலும் இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் சிறுவர்கள் முக்கிய பங்கை வகிக்கிறார்கள். சூழல் தொடர்பான கல்வி மற்றும் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய வகையில் UNOPS கல்வித்துறையுடன் இணைந்து செயலாற்றி வருகின்றது.

EU-SDDP கட்டமைப்பின் கீழ், UNOPS நிறுவனமானது, மட்டக்களப்பு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 400,000 க்கும் அதிகமானவர்களுக்கு அனுகூலம் வழங்கும் வகையில் நிர்மாணம், சமூக உட்கட்டமைப்பு மறுசீரமைப்பு மற்றும் திறன் அபிவிருத்தி செயற்பாடுகள் போன்றவற்றின் ஊடாக தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.