ஜூலை மாதம்  மாகாண சபை தேர்தல் - இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க  தகவல்

Published By: Digital Desk 2

06 Mar, 2021 | 11:13 AM
image

இராஜதுரை ஹஷான்

மாகாண சபை தேர்தலை பழைய  தேர்தல் முறைமைப்படி எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த எதிர்பார்க்கப்படுகிறது.

மாகாண சபை தேர்தல் குறித்து கருத்துரைப்பதற்கு எதிர்க்கட்சியினருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் தார்மீக உரிமை கிடையாது என  மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை இம்மாதத்தில் இரண்டாம் வாரத்தில் நடத்த ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது.

கொவிட் -19 வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

பொதுத்தேர்தல் இடம்பெற்றவுடன் மாகாண சபை தேர்தலை நடத்தும் அளவிற்கு அப்போது வளங்கள் காணப்படவில்லை.

மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறைமையில் நடத்தும் யோசனையை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் கடந்த டிசெம்பர் மாதம் அமைச்சரவையில் முன்வைத்தார்.

இந்த யோசனை குறித்து அரசியல் கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்க அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது. ஆகவே வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து கவனம் செலுத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது.

கொவிட்-19 வைரஸ் தாக்கம் தற்போது ஒப்பீட்டளவில் கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வரப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் முழுமையாகன பின்பற்றுகிறார்கள். ஆகவே இவ்வாறான பின்னணியில் மாகாண சபை தேர்தலை புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இம்முறை மாத்திரம் பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்தி எதிர்காலத்தில் புதிய தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்தி , புதிய தேர்தல் முறைமையினை முழுமையாக தேர்தல் முறைமைகளில்செயற்படுத்தலாம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய ஆலோசனை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை  அரசாங்கம் திட்டமிட்டு பிற்போடுவதாக  எதிர் தரப்பினரும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் குற்றஞ்சாட்டுகிறார்கள். மாகாண சபை தேர்தல் குறித்து கருத்துரைக்கும் தார்மீக உரிமை இவ்விரு தரப்பினருக்கும் கிடையாது.

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கம் படுதோல்விடைந்தது. இவ்வாறான நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்தினால் அதிலும் தோல்வியடைய நேரிடும் என்பதை நன்றி அறிந்து மாகாணசபை தேர்தல் திட்டமிட்ட வகையில் பிற்போடப்பட்டது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முழுமையான ஆதரவை வழங்கினார்கள்.

அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைக்கு மதிப்பளித்து செயற்படும். கடந்த அரசாங்கம் செய்த தவறை தொடர வேண்டிய தேவை கிடையாது.மாகாணசபை தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். நாட்டு மக்கள் தமக்கான மாகாண சபை பிரதிநிதிகளை ஜனநாயக முறைக்கமைய தெரிவு செய்து கொள்ளலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32