வவுனியாவில் புளியங்குளம் பொலிசாரினால் தாக்கப்பட்ட ஒருவர் வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் 

வவுனியா - புளியங்குளம் -  இராமனுர் பகுதியில் வசிக்கும்  ஆறுமுகம் பாலகிருஸ்ணன் (வயது -  50 ) என்பவரின் வீட்டிற்கு நேற்று (04) மாலை சென்ற  புளியங்குள பொலிசார் இடியன் துப்பாக்கி இருக்கின்றதா? என விசாரித்து குறித்த நபரை கைது செய்து கொண்டு சென்றுள்ளார்கள். 

கைது செய்து சென்ற குறித்த நபரை தாக்கி விட்டு மீண்டும் நள்ளிரவு 12 மணியளவில் விடுதலை  செய்துள்ளதாகவும், விடுதலை செய்யப்பட்ட குறித்த நபர் இன்று வீட்டாரின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.