மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று வாகனங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த கப்புகாமியின் ஆலோசனைக்கமைய பொலிஸ் உத்தியோகத்தர்களால்  இன்று வெள்ளிக்கிழமை (05 ) பிற்பகல் அரசடிச்சேனை, பாம்பர்சேனை பகுதியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பெக்கோ கனரக வாகனம் ஒன்றும்  மண் ஏற்றிய நிலையில் இரண்டு உழவு இயந்திரங்களும், அதிலிருந்த மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் உரிய அனுமதிப்பத்திரம் இல்லாமல் மண் அகழ்வில் ஈடுபட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவரையும்  குறித்த வாகனங்களையும் நாளை சனிக்கிழமை ( 06) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த கப்புகாமி தெரிவித்தார்.