கொழும்பு புறநகர் பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் 20 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொலன்னாவ நகர சபை பகுதி, ராஜகிரிய, மொரகஸ்முல்ல, மற்றும் ஒபேசேகரபுர ஆகிய பகுதிகளிலே குறித்த நீர் வழங்கல் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு நாவல, கொஸ்வத்த, பண்டாரநாயக்கபுர ஆகிய பகுதிகளிலும் நீர் வழங்கல் தடைப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.