(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதிகள் ராமான்ய மற்றும் அமரபுர மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட குறித்த அறிக்கையின் பிரதிகள் இன்று வெள்ளிக்கிழமை ராமான்ய மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் மகுலேவே விமல் தேரர் மற்றும் அமரபுர மகா நிக்காயாவின் பதில் மகாநாயக்க தேரர் கங்துனே அஸ்ஸஜீ தேரர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.

ஜனாதிபதியின் சட்ட பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த றோஹணதீரவினால் அறிக்கையின் பிரதிகள் கையளிக்கப்பட்டன. 

கடந்த வாரம் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களுக்கும், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.