(சசி)

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு  முன்பாக  உள்ள  திருமலை வீதியில் இரு தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும்  சாரதிகளுக்கிடையில் முறுகல் நிலை ஏற்ப்பட்டதால் அதில் பயணித்த பொதுமக்கள் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில்   இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கிழக்கு மாகாணத்தில் உள்ள சில பேருந்துகளுக்கு  வீதி அனுமதிப் பத்திரம் இல்லாத காரணத்தினால் குறித்த பேருந்துகளின் உரிமையாளர்கள் பாரிய நஷ்டத்தில்  பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.

 வீதி அனுமதிப் பத்திரம் தொடர்பாக  கடந்த காலங்களில் பாரிய நடவடிக்கைகள் எடுத்தும்  தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பாக வடக்கு, கிழக்கு பேருந்து  போக்குவரத்து  அனுமதி  பத்திரம் வழங்குவதில் பாரிய ஒரு இழுபறி நிலை நிலவுகின்றது.

இருந்தும் கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் அதிகமானவர்கள் தனியார் மற்றும் அதி சொகுசு பேருந்துகளில் செல்வதற்கு விரும்புவதனால் பேருந்து உரிமையாளர்கள் அதிக பணத்தை செலுத்தி பேருந்துகளை  கொள்வனவு செய்கின்றனர்.

ஆனால் இதற்கான அனுமதிப் பத்திரம் ஒன்றை எடுப்பதற்கு பல காலங்களாக காத்திருந்தும்  சில வேளைகளில் மட்டக்களப்பு - கொழும்பு வீதி அனுமதிப் பத்திரம் காலி - கொழும்புக்கும் கொழும்பு - மாத்தறை அனுமதிப் பத்திரம் மட் ட க்களப்புக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பேருந்துகளில் பயணிக்கும்  மக்கள் சில சிரமங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சரியான நேரத்துக்கு குறித்த இடத்தை அடைய முடிவதில்லை. காரணம் வீதி அனுமதிப் பத்திரம் இல்லாத காரணத்தில் போக்குவரத்து  பொலிசாரிடம் சிக்கி பேருந்து சாரதி மற்றும் உரிமையாளர்கள் பாதிப்படைகின்றனர்.

குறித்த பேருந்துகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு மறுப்பது புரியாதபுதிராகவுள்ளதுடன் சம்பந்தப்பட் ட  அதிகாரிகள் அனுமதிப் பத்திரத்தை வழங்க நடவடிக்கை எடுத்து மக்களின் அசௌகரியத்தை தவிர்க்க வேண்டும்.