கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை மட்டக்களப்பின் ஓட்டமாவடி, அம்பாறையின் இறக்காமம் ஆகிய இடங்களில் புதைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

நிபுணர் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களை புதைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், சுகாதார வழிகாட்டல்களும்  வெளியாகியிருந்தது.

இந்நிலையில், மட்டக்களப்பின் ஓட்டமாவடி காகிதமநகர், மஜ்மா நகர்  பகுதியில் தெரிவு செய்யப்பட்ட காணியில் கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய  ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் ஓட்டமாவடி – மஜ்மா நகரிலுள்ள காணியில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதுடன் அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.