நாட்டின் சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் கைதிகள் அடங்கிய சிறப்புக் குழுவை நியமிப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக ஒவ்வொரு சிறைச்சாலையினுள்ளும் கைதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பயற்சிகள் வழங்கப்படும் என சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த முயற்சியானது போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட கைதிகளின் போதைப்பொருள் பாவனையை குறைப்பதை நோக்காக கொண்டதாகும்.