சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில் குரங்குகளுக்கு கொவிட் தடுப்பூசி

Published By: Vishnu

05 Mar, 2021 | 01:22 PM
image

கலிபோர்னியாவின் சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில் ஒன்பது பெரிய குரங்குகளுக்கு விலங்குகளுக்காக வடிவமைக்கப்பட்ட விசேட கொவிட் -19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

நான்கு ஒராங்குட்டான்களுக்கும் ஐந்து பொனொபோ எனப்படும் குரங்குகளுக்குமே இவ்வாறு தடுப்பூ முதற் கட்டமாக வழங்கப்பட்டுள்ளன.

அதேநேரம் மிருகக்காட்சிசாலையில் மேலும் மூன்று பொனொபோக்கள் மற்றும் ஒரு கொரில்லாவுக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்ற முதல் மனிதரல்லாத விலங்குகள் இவையாகும் என்று மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

மிருகக்காட்சிசாலையில் எட்டு கொரில்லாக்கள் ஜனவரி மாதம் கொவிட் -19 க்கு சாதகமாக பரிசோதனை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்