( நா.தனுஜா )

கருத்துச் சுதந்திரம் தொடர்பான சட்டங்களை உருவாக்கும்போது அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். ஏனெனில் இவ்விடயத்தில் மிகவும் நெருக்குதலான சட்டங்கள் அதனை உருவாக்கியவர்களுக்கு எதிராகவே திரும்புவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதுகுறித்து அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

போலிச்செய்திகள் மற்றும் வெறுப்புணர்வுப்பேச்சுகள் போன்றவற்றைத் தடைசெய்வதற்கும் எதிர்கொள்வதற்கும் ஏற்றவகையில் வலுவான சட்டங்களை உருவாக்குவதற்கு அமைச்சரவை விரும்புகின்றது. மக்கள் கருத்துச்சுதந்திரத்திற்குப் பெரிதும் மதிப்பளிக்கிறார்கள்.

எனவே அதனைக் குறைப்பதற்கான அல்லது மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் போது, அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

ஏனென்றால், மிகவும் நெருக்குதலான சட்டங்கள் அவற்றை உருவாக்கிய அரசாங்கங்களுக்கு எதிராகவே திரும்புவற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்று குறிப்பிட்டிருக்கிறார்.